இன்று இந்த ராசிக்காரர்களின் மனஅழுத்தம் சற்று குறையும்...

இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். அக்டோபர் 06 புதன்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

இன்று இந்த ராசிக்காரர்களின் மனஅழுத்தம் சற்று குறையும்...

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம் - உங்கள் உடல்நலத்தில் இன்று சில பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, நீங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனமாக வாகனத்தை இயக்கவும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, பொறுப்புகளின் சுமை அதிகரிக்கலாம். இதனால் நீங்கள் சோர்வாக உணரலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினால், விரைவில் முன்னேறலாம். இன்று நீங்கள் நிம்மதியாக உணருவீர்கள். இன்று உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிட சிறந்த நேரம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி மற்றும் இரவு 7:00 மணி

ரிஷபம் - இந்த நாளில் நீங்கள் உங்களுக்காக நிறைய நேரம் செலவிடலாம். நீங்கள் நீண்ட காலத்திற்கு பிறகு பழைய நண்பர் ஒருவரை சந்திக்க நேரிடும். இதனால், மன அழுத்தம் குறையும். எதிர்மறை ஆற்றல் உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள். சிறிது இடைவெளி எடுத்து உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். இதனால் நீங்கள் வீட்டிலும் நிம்மதியாக இருப்பீர்கள். உங்கள் வீட்டின் சூழல் அழகாகவும், அமைதியாகவும் இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய காலமிது. உங்கள் உடல்நலம் பற்றி பேசும்போது, நேரத்திற்கு சாப்பிட்டு, போதுமான உறக்கத்தைப் பெற வேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட நேரம்: பகல் 12:00 மணி மற்றும் 02:00 மணி

மிதுனம் - இன்று உங்கள் மன அமைதியை இழக்காதீர்கள். இல்லையெனில் நீங்கள் கோபமாக இருப்பீர்கள். இதனால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் கோபப்படக்கூடும். எனவே, உங்கள் மனநிலையையும் உணர்ச்சிகளையும் இன்று கட்டுக்குள் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் தேவையில்லாத கோபம் உங்களை பெரும் சிக்கலில் சிக்க வைக்கலாம், எனவே, அதைத் தவிர்ப்பது நல்லது. உணர்ச்சிகளையும், அமைதியையும் பராமரிப்பது பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். இன்றிரவு ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்பினால் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 மணி மற்றும் மாலை 3:15 மணி வரை

கடகம் - தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். பிரச்சனைகளை தெளிவான மனதுடன் கையாளுங்கள். தற்போதைய வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கான பாதையாக தோன்றுவதால் நம்பிக்கையாக முன்னோக்கி செல்லலாம். ஆனால் நீங்கள் ஒருபோதும் கவனமாக இருக்கிறீர்கள். ஒரு செயல் உங்களுக்கு வரவில்லை என்றால் விட்டுவிடாதீர்கள்; மீண்டும் தொடர்ந்து முயற்சிக்கவும். இந்த நேரத்தில் வாழ்க்கையைப் பற்றிய நேர்மறையான கண்ணோட்டம் உங்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது. உங்களது நுண்ணறிவு மற்றும் விருப்பத்தின் மூலம் எந்த தடைகளையும் நிச்சயமாக கடந்து வந்து சாதிக்க முடியும். இந்த நேரத்தில் ஆரோக்கியத்திலும் சமஅளவு முக்கியத்துவம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி மற்றும் மாலை 6:30 மணி

சிம்மம் - வேலையில் அல்லது வீட்டில் சில பிரச்சனைகள் காரணமாக நீங்கள் அமைதியற்றவராகவும் பொறுமையற்றவராகவும் உணரலாம். இன்று உங்கள் வேலை திறன்களை சோதிக்கலாம். நீங்கள் பொருத்தமற்ற எதையும் செய்யவோ, வேலையை மாற்றவோ கூடாது. குறிப்பாக குடும்ப முன்னணியில் இன்று யாரையாவது காயப்படுத்தக் கூடிய உங்கள் கருத்துக்களை முன்வைக்காமல் இருப்பது அவசியம். இது அமைதியையும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்யும். வணிகர்கள் தங்கள் புதுமையான யோசனைகள் அல்லது முதலீடுகளை பெறலாம். எதிர்கால வணிக ஒப்பந்தங்களை இறுதி செய்ய சரியான நேரத்திற்காக காத்திருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை

கன்னி - வேலையைப் பற்றி பேசினால் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். நீங்கள் மனரீதியாக சோர்வடையச் செய்யும் கூடுதல் பொறுப்புகளை நீங்கள் கையாள வேண்டியிருக்கும். இருப்பினும், இன்றைய நாளின் முடிவில் கடினமாக வேலைகள் அனைத்தும் முடிக்கப்படும். மேலும் நீங்கள் சில முக்கியமான முடிவுகளுக்கு வரும்போது இது உங்கள் உந்து சக்தியாக இருக்கலாம். இன்று நீங்கள் நேரத்திற்கு மதிப்பளித்து யோசனைகள் அல்லது திட்டங்களை வரிசைப்படுத்தி பணியாற்றவும். அவ்வாறு செய்வது உங்கள் எதிர்காலத்தை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும். இன்று நீங்கள் ஒரு முக்கியமான சந்திப்பைத் திட்டமிடலாம். நீங்கள் நேர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

துலாம் - உங்களைச் சுற்றி பல தடைகள் இருக்கலாம். எனவே, நீங்கள் மிகவும் விரக்தியாக உணருவீர்கள். இன்று நீங்கள் அலுவலகத்தில் சில சிறிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது உங்கள் வேலையை விரும்பத்தகாத ஒன்றாக மாற்றலாம். இது உங்கள் நற்பெயரையும் குறைத்து, பணி திறனை குறைத்துக்காட்டும். வியாபாரிகள் புதிதாக முதலீடு செய்யும் போது,​​கவனமாக இருங்கள். இல்லையெனில் நீங்கள் இழப்பை சந்திக்க நேரிடும். உங்கள் எதிரிகள் உங்களை கீழே இழுக்க காத்திருக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள். எனவே, எச்சரிக்கையாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி மற்றும் மாலை 4:00 மணி

விருச்சிகம் - நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். நீங்கள் புதிய மற்றும் உற்சாகமான ஒன்றைச் செய்ய உந்துதல் பெறலாம். உங்கள் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையிலிருந்து ஓய்வு எடுக்கலாம். உங்கள் பழைய யோசனைகளை ஒதுக்கிடுங்கள். உங்களை நேர்மறையாகவும் அதிக நம்பிக்கையுடனும் செய்யும் செயல்களில் ஈடுபட இது ஒரு நல்ல நேரம். உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகளுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எனவே, பிடித்த வேலையை உற்சாகத்துடன் செய்ய முற்படுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி மற்றும் மாலை 5:00 மணி

தனுசு - இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கப் போகிறது. எனவே, நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் ஒரு கடினமான கட்டத்தை அடைந்திருந்தாலும், விஷயங்கள் நிச்சயமாக நேர்மறையான திசையில் பயணிக்கும். நீங்கள் நிறைய சாதிக்கப் போகிறீர்கள். எனவே, எல்லாவற்றிலும் பெருமை கொள்ள வேண்டும். தயவுசெய்து, வேலையுடன் ஓய்விலும் சற்று கவனம் செலுத்துங்கள். வாழ்க்கையை அனுபவிக்க நீங்கள் கடினமாக உழைத்துள்ளீர்கள் என்றால் நிச்சயம் பொன்னான எதிர்காலத்தைப் பெறலாம். இருப்பினும், வேலைக்கும் விளையாட்டிற்கும் இடையில் ஒரு சமநிலையை வைத்திருக்க வேண்டுமென்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி மற்றும் மாலை 5:00 மணி

மகரம் - உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, இன்று நன்றாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் இன்று நீங்கள் வெளியில் செல்லும் வாய்ப்பைப் பெறலாம். இது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் சிறிய பயணத்திற்கு செல்ல இன்று சிறந்த நாள். இன்று அன்புக்குரியவர்களுடன் அற்புதமான நாளாக இருக்கும். அது உங்கள் மீது ஒரு பிணைப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும். சிறு உடல்நலப் பிரச்சனையால் நீங்கள் சற்று சிரமப்படலாம். கவலைப்படுவதற்கு பதிலாக சற்று ஓய்வெடுப்பது சிறந்த தீர்வாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

கும்பம் - இந்த நேரத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் எந்தவிதமான எதிர்மறை ஆற்றலிலிருந்தும் உங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சியுங்கள். இதுபோன்ற விஷயங்கள் உங்கள் மனதை பாதிப்பது மட்டுமல்லாமல் உங்கள் வெற்றிக்கான பாதையில் ஒரு வகையான தடையாகவும் இருக்கும். இது உங்கள் மனநிலையை பாதிக்கவும், முன்னேற்ற பாதையை பாதிக்கவும் அனுமதிக்காதீர்கள். நேர்மறையாக இருங்கள். நல்ல விஷயங்கள் உங்களைப் பின்தொடரும். இன்று உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி மற்றும் மாலை 4:00 மணி

மீனம் - இந்த நாளில் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். பணிச்சுமையும் சற்று அதிகமாக இருக்கும். அதைச் சமாளிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். உங்களிடம் பல பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்ட காரணத்தால் நீங்கள் மன அழுத்தத்தை உணரலாம். அமைதியாக இருந்து, உங்கள் எல்லா பொறுப்புகளையும் சமநிலைப்படுத்த முயற்சி செய்யுங்கள். விடாமுயற்சியும் பொறுமையும் இருந்தால் உங்களுக்கு மிகவும் பலனளிக்கும். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். வேலையுடன் உங்கள் உடல்நலன் மீதும் சம அளவு முக்கியத்துவம் அளிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி மற்றும் மதியம் 2:30 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0