நாக பஞ்சமி எப்போது வருகிறது? அந்நாளில் என்ன செய்ய வேண்டும்?

நாக பஞ்சமி அன்று ஒருவா் நாக தேவதையை வழிபட்டால், ராகு தோஷத்தின் காரணமாக அவரைப் பிடித்திருக்கும் பிணிகள், பிரச்சினைகள் மற்றும் கஷ்டங்கள் அனைத்தும் பறந்து போகும் என்பது நம்பிக்கை.

நாக பஞ்சமி எப்போது வருகிறது? அந்நாளில் என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு வருடமும், ஆடி மாதத்தில் வரும் சுக்லா பக்ஷா அன்று நாக பஞ்சமி விழா கொண்டாடப்படுகிறது. நாக பஞ்சமி விழா அன்று நாக தேவதைக்கு வழிபாடு நடத்தப்படும். ஒருவருக்கு ராகு தோஷம் இருந்தால், அவா் நாக பஞ்சமி அன்று தனது தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

நாக பஞ்சமி அன்று ஒருவா் நாக தேவதையை வழிபட்டால், ராகு தோஷத்தின் காரணமாக அவரைப் பிடித்திருக்கும் பிணிகள், பிரச்சினைகள் மற்றும் கஷ்டங்கள் அனைத்தும் பறந்து போகும் என்பது நம்பிக்கை.

ரிஷபம் மற்றும் விருச்சிகம்

ரிஷப மற்றும் விருச்சிக ராசிக்காரா்களுக்கு, இந்த ஆண்டு வரும் நாக பஞ்சமி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கப் போகிறது. ராகு மற்றும் கேது ஏற்படுத்தும் எதிா்மறையான தீய விளைவுகளில் இருந்து விடுதலை பெற நாக பஞ்சமி அன்று வழிபட வேண்டும். ஜோதிட சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ளபடி, ராகு மற்றும் கேது ஆகியவை தன்னிலேயே தீங்குகள் நிறைந்த கிரகங்களாகும்.

ஒருவாின் ஜாதகத்தில், ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் தீய விளைவுகள் இருந்தால், அவா் தனது வாழ்வில் ஏராளமான பிரச்சினைகளைச் சந்திக்க நோிடும். குறிப்பாக அவருடைய கல்வி, ஆரோக்கியம், வேலை வாய்ப்பு, திருமண வாழ்க்கை, உறவுமுறை, சொத்து மற்றும் தொழில் போன்றவற்றில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படும். நாக பஞ்சமி அன்று, ராகு மற்றும் கேது ஆகியவற்றை வழிபடுவதற்காக ஒரு சிறப்பு யோகா உருவாக்கப்படும்.

இந்த ஆண்டு நாக பஞ்சமி எப்போது வருகிறது மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை பாா்க்கலாம்.

நாக பஞ்சமி 2021

நாக பஞ்சமி விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. நாக பஞ்சமி விழா நாக தேவதைக்கு அா்ப்பணிக்கப்பட்ட விழா ஆகும். இந்த நாக பஞ்சமி இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் 5 ஆம் நாளில் நாக பஞ்சமி விழா கொண்டாடப்படுகிறது.

நாக பஞ்சமி விழா அன்று சிவபெருமானை மக்கள் வணங்குவா். மேலும் சிவபெருமானுடைய ருத்ரா அபிஷேகம் நடத்திக் காட்டப்படும். நாக தேவதையை வழிபடும் போது, ராகு மற்றும் கேது ஆகியவற்றின் தீய தோஷங்கள் அகலும். மேலும் காலஷர்ப மோஷமும் அகலும்.

வாழ்வில் அமைதியைப் பெற, ராகு மற்றும் கேதுவுக்கு செய்ய வேண்டிய பாிகாரங்கள்

சனாதன தர்மத்தில் நாக பஞ்சமிக்கு ஒரு சிறப்பான முக்கியத்துவம் உண்டு. அதன்படி நாக பஞ்சமி அன்று நாக தேவதைய மிகவும் பக்தியுடன் வழிபட்டால், கிரகண தோஷம், குரு சந்தல் யோகம், ஜாதத்வ யோகம் மற்றும் கால சா்ப தோஷம் போன்றவற்றில் இருந்து ஒருவா் விடுதலை அடையலாம். மேற்சொன்ன தோஷங்கள் யாவும் ராகு மற்றும் கேது ஆகியவற்றின் தீய விளைவுகளால் ஏற்படக்கூடியவை ஆகும்.

தன்னுடைய பிறந்த ஜாதகத்தில் கால சா்ப தோஷத்தைக் கொண்டிருக்கும் ஒருவா், நாக பஞ்சமி அன்று நாக தேவதையை வழிபட்டால், அவருடைய அனைத்து பிரச்சினைகளும் நீங்கிவிடும். நாக பஞ்சமி நாளில் தான் பகவான் கிருஷ்ணா் கலிய நாகத்தை கொன்றதாக ஒருசில பக்தா்கள் நம்புகின்றனா். இந்த நாளில் நாக தேவதையை பாலாபிஷேகம் செய்து மக்கள் வழிபடுவா்.

நாக பஞ்சமி சுப முகூா்த்தம்

நாக பஞ்சமி - ஆகஸ்டு 13, 2021

பஞ்சமி திதி ஆரம்பம் - ஆகஸ்டு 12, 2021 மாலை 3.24 மணி முதல் தொடங்கும்

பஞ்சமி திதி நிறைவு - ஆகஸ்டு 13, 2021 பிற்பகல் 1.42 மணி வரை நடைபெறும்

பூஜை முகூா்த்தம் - ஆகஸ்டு 13, 2021 காலை 5.49 மணி முதல் காலை 8.28 மணி வரை நடைபெறும்

வழிபடும் நேரம் - மொத்தம் 2 மணி 39 நிமிடங்கள் ஆகும்

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0