இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது

இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 19 செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இன்று உங்கள் பேச்சில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய நாள். உங்கள் பேச்சால் பெரிய சிக்கலில் சிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்கள், தங்கள் கடின உழைப்பால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான வழி திறக்கப்படும். மறுபுறம், வணிகர்கள் இன்று பெரிய நிதி நன்மைகளைப் பெற்றிடலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமக இருக்கும். வாழ்க்கைத் துணையின் இயல்பில் சில மாற்றத்தை காணலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள்ள் அவர்களின் உணர்வுகளை அன்புடனும் அமைதியுடனும் அறிய முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று அவ்வளவு நன்றாக இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை

ரிஷபம் - சில உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக இன்றைய தினம் உங்களுக்கு சற்று கடினமானதாக இருக்கும். உணவுப் பழக்கம் காரணமாக வயிற்று வலி ஏற்படலாம். கவனக்குறைவாக இருப்பதை தவிர்க்கவும். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், படிப்பில் அதிக கவனத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். தொடர் கவனக்குறைவால், அழகான எதிர்காலம் குறித்த உங்களது கனவு முழுமையடையாது. உத்தியோகஸ்தர்களுக்கு ஒரு சாதாரண நாளாக இருக்கும். இன்று உங்கள் பணிகள் அனைத்தும் எந்தவித இடையூறும் இல்லாமல் முடிக்கப்படும். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்போர் சில சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். இருப்பினும், விரைவில் உங்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படும். பெற்றோருடனான உறவு வலுவாக இருக்கும். பாதகமான சூழ்நிலையில் அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 முதல் இரவு 10:10 மணி வரை

மிதுனம் - பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் நிதி முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். திடீர் பண வரவு மகிழ்ச்சி அளிக்கும். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், சமீபத்தில் எழுதிய போட்டித் தேர்வுகளில் நீங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையற்ற விவாதத்தைத் தவிர்க்கவும். இது உங்கள் வேலை மற்றும் மரியாதை இரண்டையும் பாதிக்கும். உங்கள் தவறான அணுகுமுறையால் உயர் அதிகாரிகள் கடுமையான முடிவை எடுக்கக்கூடும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

கடகம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள், இன்று ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறலாம். கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி முழு நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும். இன்று வணிகர்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. எண்ணெய் தொடர்பான வணிகம் செய்வோர் நிதி ரீதியாக பயனடையலாம். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறந்த நாளாக அமையும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். சிந்தனையுடன் செலவு செய்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள். உங்களுக்கு பிடித்த உணவுகளை அனுபவித்து உண்பதற்கான வாய்ப்பையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் 12:25 மணி வரை

சிம்மம் - இன்று சில சந்தர்ப்பங்களில் நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். சில சந்தர்ப்பங்களில் விரக்தியடையலாம். உத்தியோகஸ்தர்கள் இன்று மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஏதேனும் புதிய திட்டத்தில் பணிபுரிகிறீர்கள் என்றால், நேரத்தை கவனத்தில் கொணடு செயல்படவும். வணகர்களின் முக்கியமான வேலை ஏதாவது, இன்று நடுவில் சிக்கிக்கொள்ளலாம். இத்தகைய சூழ்நிலையில் பொறுமையாக பணியாற்ற வேண்டும். அவசர முடிவுகள் வேண்டவே வேண்டாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் நல்லிணக்கம் இருக்கும். பணத்தைப் பொறுத்தவரை, இன்றைய நாள் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இன்று நீங்கள் பழைய கடனை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். உடல்நலம் பற்றி பேசும்போது, வானிலை மாற்றம் காரணமாக சில சிக்கல்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கன்னி - ஊடகங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான பணியில் உள்ளோருக்கு இன்று ஒரு நல்ல நாளாக இருக்கப்போகிறது. சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். வணிகர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்காது. எந்தவொரு அவசர முடிவாலும் பெரும் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இன்று படிப்பதில் முழு கவனத்தையும் உணர மாட்டீர்கள். சோம்பல் காரணமாக, உங்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். இருப்பினும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணத்தின் நிலைமை மேம்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

துலாம் - மாற்றுவேலை குறித்து யோசிப்போர் இன்று அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பொறுமையாக முயற்சிப்பதன் மூலம் சிறந்த வாய்ப்பினை பெற்றிடலாம். அரசு வேலைக்கு முயற்சிப்போர், தங்களது முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். கூட்டு வியாபாரிகள் இன்று நல்ல பயனடையலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். குழந்தைகளுடன் கூடும் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். பெற்றோரின ஆசீர்வாதத்தை பெறுவீர்கள். உடல்நலத்தைப் பொறுத்தவரை, இன்று மிகவும் சோர்வாக உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை

விருச்சிகம் - ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு அவ்வளவு நல்லதாக இருக்காது. தோல் பிரச்சனை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த நேரத்தில் ஆரோக்கியத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நிதி பற்றிப் பேசினால், இன்றைய நாள் கலவையான முடிவுகளைத் தரும். நிதி நிமையை மேமபடுத்த தவறான பாதையை பின்பற்ற வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் கூடும். அனைத்து பணிகளையும், அமைதியான மனதுடன் கையாள முயற்சியுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில சச்சரவுகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

தனுசு - வியாபாரிகள், எந்தவொரு பெரிய மற்றும் முக்கியமான ஒப்பந்தத்தை செய்வதன் முன்பு, லாப நஷ்டம் குறித்தும் மதிப்பிட வேண்டும். கண்மூடித்தனமாக யாரையும் நம்ப வேண்டம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சிறந்த நாளாக இருக்கும். பழைய கடனிலிருந்து இன்று விடுபடலாம். வாழ்க்கைத் துணையுடன் பெரிய சண்டை உண்டாகலாம். கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. வார்த்தைகளை மிகவும் சிந்தனையுடன் பயன்படுத்தவும். அன்றாட வழக்கத்தை ஒழுங்கமைப்பதன் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாத்திடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் மாலை 3:30 மணி வரை

மகரம் - அலுவலகத்தில் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள வேண்டிய நாள். உங்கள் திடீர் கோபத்தால் சக ஊழியர்களுடன் விவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளாவிட்டால், சிரமங்கள் அதிகரிக்கக்கூடும். சில்லறை வணிகர்கள் இன்று நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட உங்கள் தந்தையின் உடல்நலத்தில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் காணலாம். இருப்பினும், அவர்களை மன அழுத்தத்திலிருந்து விலக்கி வைக்க முயற்சியுங்கள். இன்று நீங்கள் கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை

கும்பம் - அலுவலகத்தில் உங்கள் சிறந்த செயல்திறனுக்காக நீங்கள் கௌரவிக்கப்படலாம். மூத்த அதிகாரிகள் உங்களைப் புகழ்வதேடு, சக ஊழியர்களிடமிருந்து பாராட்டையும் பெறுவீர்கள். வியாபாரிகள், இன்று முதலீடுகளை செய்வதற்கு மிகவும் சாதகமான நாள். சிறு வணிகர்கள் நன்கு பயனடையலாம். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் சிறப்பக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தை சிந்தனையுடன் செலவிடுங்கள். இன்று அன்புக்குரியவர்களுடன் வெளியே செல்ல வாய்ப்பு கிடைக்கலாம். உடல்நலம் நன்றாக இருக்கும், இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

மீனம் - இன்று வணிகர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். மாற்று வேலை பற்றி யோசிப்பவர்கள், இன்று ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறலாம். அரசு வேலைகளில் பணிபுரிவோருக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்களிடம் சில முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், அலட்சியமாக இருக்க வேண்டாம். வாழ்க்கைத் துணையுடனான இயல்பில் சற்று கடுமையான தன்மை தென்படும். பேசும்போது, உங்கள் வார்த்தைகளில் சிறப்பு கவனம் செலுத்துங்கள், நிதி நிலை நன்றாக இருக்கும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துங்கள். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0